எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி 
அரசியல்

திமுக ஆட்சியில் தறிகளை எடைக்குப் போடும் சூழல்... நாமக்கல்லில் இபிஎஸ் அதிரடி பிரச்சாரம்!

காமதேனு

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த அரசால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழக அரசின் திட்டங்களையும், அதிமுக அரசின் திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. தொழில் செய்வதே கேள்விக்குறியாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

டீசல் விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வீடு கட்டுவது கனவாகவே உள்ளது.

கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் பட்டியிலில் கட்டுமானப் பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூல் விலை, மின் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினையால் தறிகளை எடைக்குப் போடும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

SCROLL FOR NEXT