அரசியல்

‘இந்தியாவை உடைக்க உதவாதீர்கள், ஒன்றிணைக்க உதவுங்கள்’ - பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் அதிரடி!

காமதேனு

டெல்லியில் நடைபெற்றுவரும் ராகுல் காந்தி தலைமையிலானபாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று இணைந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன், எனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினேன், ஆனால் நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சி கோடுகளும் மங்கலாக வேண்டும். அந்த வரியை மங்கலாக்கிவிட்டு இங்கு வந்தேன்.

நான் கண்ணாடி முன் நின்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது நாட்டுக்கு நான் மிகவும் தேவைப்படும் நேரம். அப்போது எனக்குள் இருந்து ‘கமல்... இந்தியாவை உடைக்க உதவாதீர்கள், ஒன்றிணைய உதவுங்கள்’ என்று ஒரு குரல் வந்தது. எந்த கட்சி ஆளுகிறது என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் தெருவில் இறங்கி போராடுவேன். அதற்காகவே டெல்லி வந்தேன்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT