அரசியல்

அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது இயக்குநர் பா.ரஞ்சித் சாடல்

காமதேனு

அமைச்சர் ராஜ கண்ணப்பனை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. ராஜ கண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராஜ கண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனை இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கிய தனம்)! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்! அறியாதவன் திரு.ராஜ கண்ணப்பன் ஆகிறார்!" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT