அரசியல்

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி: அப்போலோவிற்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்

காமதேனு

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாகச் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்விலிருந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே அவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுவெளியில் நிகழ்ச்சிகளையும் அவர் தவிர்த்து வருகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கோபாலபுரம் வீட்டிற்கு சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார். அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தயாளு அம்மள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று அவரின் உடல்நலம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

SCROLL FOR NEXT