கான்ராட் சங்மா
கான்ராட் சங்மா மேகாலயாவில் மீண்டும் முதல்வராகும் சங்மா; திரிணமூலுக்கு ஏற்றம்: காங்கிரஸுக்கு பின்னடைவு - முழு ரிசல்ட்
அரசியல்

மேகாலயாவில் மீண்டும் முதல்வராகும் சங்மா; திரிணமூலுக்கு ஏற்றம்: காங்கிரஸுக்கு பின்னடைவு - முழு ரிசல்ட்

காமதேனு

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில்னா ஆளும் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க உதவிசெய்வோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

60 இடங்களைக் கொண்ட மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக தேசிய ஜனநாயக கட்சி எனப்படும் யுடிபி 11 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது

கடந்த 2018 மேகாலயா தேர்தலில் 21 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் தற்போது திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், வாய்ஸ் ஆப் தி பீப்பிள் பார்ட்டி 4 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், பிடிஎப் 2 தொகுதிகளிலும், ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்கரட்டிக் பார்ட்டி 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். மேகாலயாவில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. ஆனாலும், 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சியமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகவும் ஆதரவளித்துள்ளது.

இந்த தேர்தலில் என்பிபி 31.49 சதவீத வாக்குகளையும், யுடிபி 16.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் 13.78 %, காங்கிரஸ் 13.14 சதவீதம், பாஜக 9.33% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT