அரசியல்

`ரஜினி சந்தித்தது பிரச்சினையல்ல; அரசியல் பேசியதுதான் தவறு'- கொந்தளிக்கும் கே.பாலகிருஷ்ணன்

காமதேனு

``தமிழ்நாடு ஆளுநரை மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசி ஏற்புடையதே. ஆனால் ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது இதனால் உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றியுள்ளது, கண்டனத்திற்கு ஆளானது.

இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது.

தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என்று கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT