புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உரை  கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ரங்கசாமி: அனைத்துப் பெண்களும் இலவசப் பயணம் செய்யலாம் என அறிவிப்பு
அரசியல்

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ரங்கசாமி: அனைத்துப் பெண்களும் இலவசப் பயணம் செய்யலாம் என அறிவிப்பு

காமதேனு

புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி பட்டியலினப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு பட்டியலின் அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் பயணிப்பவர்கள் பட்டியலினப் பெண்கள் என தனிமைப்படுத்தப்படுவது நவீன தீண்டாமையை அரசு கடைபிடிப்பதாக அமையும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதனால் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும்  அனைத்து பெண்களுக்கும்  அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பெண்களும் புதுச்சேரி அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என முதல்வர் ரங்கசாமி  இன்று அறிவித்தார்.

மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT