முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் 2018 முதல் 2022 வரை குற்றங்களின் எண்ணிக்கை என்ன?- விவரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்
அரசியல்

2018 முதல் 2022 வரை குற்றங்களின் எண்ணிக்கை என்ன?- விவரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

காமதேனு

-2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்துள்ள குற்றங்களின் விவரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்க காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் இதனை கவனித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த 19-ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடைபெற்ற குற்றச்சம்பவங்களின் விவரம் அதற்காக போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநில குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல் படி, 2019-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், கோயம்பத்தூர், கடலூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரின் உத்தரவை அடுத்து மாநில குற்ற ஆவணக்காப்பகம் எல்லா காவல் நிலையங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், காவல் நிலையத்தில் பதியப்படும் குற்ற வழக்குகள் குறித்த பின்னணியை மாநில குற்ற ஆவணக்காப்பகத்திற்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2018-ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, கொலை, கொலை முயற்சி, காயம், மோசமான காயம், கலவரங்கள் மற்றும் தீ வைப்பு, ஆதாயத்திற்காக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் (பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், வழக்குகள் வரதட்சணை தடைச் சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் முதல்வர், மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஹெராயின் மற்றும் பிற போதைப்பொருள்களின் அளவு குறித்த விவரங்களையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT