அரசியல்

சிதம்பரம் நடராஜர் காேயில் கையகப்படுத்தப்படுமா?- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

காமதேனு

சிதம்பரம் நடராஜர் காோயிலை அரசு கையகப்படுத்துமா? என்பது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்த அளவில் கோயிலை அரசு எடுக்க வேண்டும் என்ற வகையில் நாங்கள் எங்களுடைய செயலை முடித்துவிடவில்லை. ஆனால் திருக்கோயில் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டு வருகின்ற திருக்கோயில் என்பதால் அங்கே நடைபெறுகின்ற நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலத்தினுடைய மேலான எண்ணம்.

இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி என்ன சொல்கிறதோ இதைப் பின்பற்றி விதி மீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல. தவறுகளை சரி செய்ய வேண்டும். அந்த தவறுகளை சரி செய்யாத பட்சத்தில் அரசியல் சட்ட திட்டத்திற்குட்பட்டு அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றதோ அதை நிச்சயமாக பயன்படுத்துவோம்" என்றார்.

SCROLL FOR NEXT