ஜி20 மாநாடு 
அரசியல்

'இது ஜனநாயகம் இல்லாத நாடுகளில் தான் நடக்கும்...' ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

காமதேனு

ஜி20 மாநாட்டையொட்டி நடைபெறும் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைக்கப்படாததற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பாரத் மண்டபம்

டெல்லியில் ஜி 20 மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிததாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள், கட்சி தலைவர்கள் தலைநகரில் குவிந்துள்ளனர்.

ஜி20 மாநாடு

உலக நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து, உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன், மெகா சந்திப்பு இன்று தொடங்குகிறது. இன்று இரவு ஜனாதிபதி அளிக்க உள்ள விருந்தில் பங்கேற்க சுமார் 500 தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ப.சிதம்பரம்

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது X சமூக வலைதளப்பக்கத்தில் காட்டமான பதிவு வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை ஜி20 விருந்துக்கு அழைக்காதது குறித்த கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம்," ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா ஜனநாயகமும், எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT