ப.சிதம்பரம் 
அரசியல்

மக்களை பாஜக நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்: ப.சிதம்பரம் கிண்டல்!

வைரம்

மத்திய பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புகள், தேர்தல் நேரத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், பாஜக வேட்பாளர்கள் ஒருவரது வீட்டில் கூட சோதனை நடைபெறாததால் அவர்கள் அனைவரும் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புகள், தேர்தல் நேரத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடத்தப்பட்ட 4 பேரில் ஒருவர், பாஜகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலிருந்தவர். கடந்த 1-ம் தேதி தான் அக்கட்சியிலிருந்து விலகினார்.

விசாரணை அமைப்பு

எனக்குத் தெரிந்தவரை பாஜக வேட்பாளர்கள் ஒருவரது வீட்டில் கூட விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தவில்லை. இதிலிருந்து, பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தெய்வீக புனிதத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

ஒருவேளை தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுமானால், தெலங்கானா மக்களை பாஜக நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது. இதில் மாறுபட்ட கருத்துகே இடமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT