அரசியல்

சத்தீஸ்கர் முதலமைச்சரின் துணை செயலாளர் கைது - அமலாக்கத்துறை அதிரடி!

காமதேனு

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் ஹவாலா மோசடி நடந்ததாகக் கூறப்பட்டது. ஹவாலா பரிவர்த்தனைகளின் கீழ், முறையான வங்கி அமைப்பில் நுழையாமல் பணம் கை மாறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பிப்ரவரி 2020-ல் சௌராசியாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மத்திய ஏஜென்சியின் இந்த சோதனை அரசியல் பழிவாங்கல் என்றும், தனது அரசாங்கத்தை ஸ்திரதன்மையற்ற நிலைக்கு மாற்றும் முயற்சி என்றும் முதல்வர் பூபேஷ் பகேல் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT