பிரதமர் மோடி 
அரசியல்

சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் இதனை மாற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

காமதேனு

சுதந்திர தின நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், அந்தந்த மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில், டெல்லி செங்கோட்டையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பிரதமரின் கிஷான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை மத்திய அரசு அழைத்துள்ளது. இந்நிலையில் சுதந்திர நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாளையொட்டி ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்புப் படத்தை மாற்ற வேண்டும். நமது நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றும் வகையில் இத்தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT