ரமேஷ்
ரமேஷ்  
அரசியல்

`சம்பளம் பெறாமல் பணியாற்றுவேன்'- குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கும் நாமக்கல் சமூக சேவகர்

காமதேனு

நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தரப்பு வேட்பாளர் யார்? எதிர்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர் யார் என்பதெல்லாம் இன்னும் முடிவாகாத நிலையில் நானும் போட்டி போடுவேன் என்று நாமக்கல்லில் இருந்து ஒரு வேட்பாளர் கிளம்பியிருக்கிறார்.

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பன்பட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். சமூக சேவகரான இவர் பொதுநல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு விஷயங்களில் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி அதன் நிறுவன தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் 2022 க்கான தேர்தல் அதிகாரி மற்றும் பொதுச் செயலாளர் பி.சி.மோடியிடம் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர்தான். அதனால் இந்த பதவிக்கு போட்டி இடுகிறேன். இந்த பதவிக்கு நான் தேர்வானால் சம்பளம் பெறாமல் 5 ஆண்டுகளுக்கும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் முன்மாதிரி குடிமகனாக இருப்பேன் என மனதார உறுதி அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT