அரசியல்

நீரைக்கிழித்து பாய்ந்த படகுகள்: துடுப்பு போட்டு அசத்திய ராகுல் காந்தி

காமதேனு

ஆலப்புழாவில் நடைபெற்ற படகுப் போட்டியில் துடுப்புகளை வீசி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி படகு ஓட்டியது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த 2019, ஆகஸ்ட் 10-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை. தற்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் அவர் தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் வரை இந்த பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த ராகுல்காந்தி, தற்போது கேரளாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆலப்புழை சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையடுத்து ஆலப்புழா புன்னமடா ஏரியில் நடைபெற்ற பராம்பரிய பாம்பு படகுப் போட்டியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது துடுப்புகளைப் போட்டு அவர் படகை இயக்கியது பார்வையாளர்களையும், காங்கிரஸாரையும் பரவசரப்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியை அவர்கள் உற்சாகமுட்டினர்.

SCROLL FOR NEXT