அரசியல்

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!

காமதேனு

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அப்போது வீட்டுப் பயன்பாடு, வணிகப் பயன்பாட்டு என புதிய மின்கட்டண விவரங்களை வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும், அதிமுக ஆட்சியில் கடந்த பத்து வருடங்களாக மின்துறையில் நிர்வாகச் சீர்கேடு இருந்த காரணத்தினாலும் வேறுவழியின்றி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தார். புதிய மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜூலை 23-ம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டம் நடத்தியும் மின் கட்டண உயர்வைத் திருப்பப் பெறவில்லையென்றால், மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் ” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து மாவட்டத் தலைநகரங்களில் மின் கட்டண உயர்வை எதிர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராகவும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT