பிரதமர் மோடி
பிரதமர் மோடி கோப்புப் படம்
அரசியல்

‘குஜராத்தை இழிவுபடுத்த நினைப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ - பிரதமர் மோடி

காமதேனு

குஜராத்தை அவதூறு செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வல்சாத் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத்தை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் நமக்கு எதிராகப் பேசுபவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் குஜராத்தையும், குஜராத்திகளையும் இழிவுபடுத்தப் பார்க்கிறார்கள். வெளிநாடுகளிலும் நமது மாநிலத்தை அவமதிக்கப் பார்க்கிறார்கள்.

அப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள்.

குஜராத் மக்கள் யாரையும் புண்படுத்த மாட்டார்கள். அவர்கள் சென்ற இடமெல்லாம் பாலில் சர்க்கரை கரைவது போல உள்ளூர் மக்களுடன் கலந்தனர். வெளியில் இருந்து யாராவது வந்தால், அவர்களையும் அரவணைத்துள்ளனர். எனவே குஜராத்தை இழிவுபடுத்த நினைப்பவர்கள் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது”என்றார்.

மேலும், “குஜராத்தை ரிவர்ஸ் கியரில் கொண்டு செல்ல முயற்சிப்பவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், தற்போது ரூ. 250-300 ஆக இருக்கும் மாதாந்திர டேட்டா உபயோகத்தின் பில் ரூ. 5,000 ஆக இருந்திருக்கும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 1 ஜிபி டேட்டா ரூ.300, இப்போது அது ரூ.10" என்று கூறினார்.

SCROLL FOR NEXT