அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க முயற்சி: 40 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு
அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க முயற்சி: 40 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு

காமதேனு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சென்னை, கோவை, கரூர் வீடு உள்ளிட்ட இடங்களிலும், அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி அதிமுக அரசில் அமைச்சராக இருந்த போது வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என விசாரணை நடைபெற்று வந்தது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மீண்டும் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

அதே நேரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி கேட்டதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு, இடங்களில் இன்று சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அரசு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது.

SCROLL FOR NEXT