அரசியல்

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய 3 எம்எல்ஏக்கள்: சூடுபிடித்தது குஜராத் தேர்தல்!

காமதேனு

குஜராத்தில் பத்து முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பழங்குடியின தலைவர் மோகன்சிங் ரத்வா பாஜகவுக்கு தாவினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சியாக, ஜலோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ பவேஷ் கட்டாரா தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யாவிடம் நேற்று சமர்ப்பித்தார்.

நேற்று ஒரே நாளில் பதவி விலகும் இரண்டாவது தலைவர் இவராகும். முன்னதாக, தலாலா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பகவான்பாய் டி பரத், நேற்று காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு காங்கிரஸிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இவர்கள் இருவரும் பாஜகவில் இணையவுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த பழங்குடியின தலைவர் மோகன்சிங் ரத்வா செவ்வாயன்று ராஜினாமா செய்து பாஜகவுக்கு தாவி அதிர்ச்சி கொடுத்தார். குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. வாக்குகள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்படுகிறது.

SCROLL FOR NEXT