அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமமுக அம்புட்டுத்தானா?: அதிமுக கூட்டணியில் இடமில்லை என்கிறார் ஜெயக்குமார்
அரசியல்

அமமுக அம்புட்டுத்தானா?: அதிமுக கூட்டணியில் இடமில்லை என்கிறார் ஜெயக்குமார்

காமதேனு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் நாங்கள் தொடர்கிறோம். அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு ஒருபோது இடம் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செய்தார்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ சட்டப்படி நாங்கள் வழக்கை எதிர்கொண்டதால் எங்கள் பக்கம் நியாயம், நீதி உள்ளதால் வெற்றி எங்களுக்குக் கிடைத்துள்ளது. கடிக்கும் மிருகங்களுடன் கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் நேற்று ஒன்று, இன்று ஒன்று என பேசக்கூடிய நிறமாறிகளுடன் நிச்சயம் வாழ முடியாது.

ஓபிஎஸ்சை பொறுத்தவரை அவர் தொண்டர்களாலும், பொதுமக்களாலும் துடைத்தெறியப்பட்ட சட்டி. அதனால் அவர் பற்றி இனி பேசுவது தேவையற்றது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் அவருக்கு எப்படி அதிமுகவில் இடம் இருக்கும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். ஏதோ சின்ன சின்ன ஐ.டி விங்கில் உள்ளவர்கள் கருத்து போடுவதால் கூட்டணி இல்லையென்று ஆகாது. அதிமுக கூட்டணியில் ஒரு போதும் அமமுகவிற்கு இடம் கிடையாது’’ என்றார்.

SCROLL FOR NEXT