அரசியல்

அம்மா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: திருமாவின் நெகிழ்ச்சியூட்டும் ட்விட்

காமதேனு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தாய் பெரியம்மாள் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் தாய் பெரியம்மாள் கடந்த ஜூன் மாதம் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், " அம்மா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது முறையாக இதய குருதிக் குழாயிலுள்ள அடைப்பை நீக்கி அகலப்படுத்தும் ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். அவர் பூரண நலமுடைய வேண்டும் என்று பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT