ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் 
அரசியல்

‘சமூகத்தின் அனைத்து தூண்களும் இப்போது அச்சத்தில் மூழ்கியுள்ளன’ - ப.சிதம்பரம் ஆதங்கம்

காமதேனு

இந்தியாவில் அரசியல் கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தூண்களும் இப்போது அச்சத்தில் மூழ்கியுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சாகித்ய ஆஜ்தாக் 2022 நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், “கடந்த சில ஆண்டுகளில் இந்தியா என்ற எண்ணம் கடுமையாக சேதமடைந்துள்ளது. நாட்டில் பரவலான அச்சம் நிலவுகிறது

தற்போது இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதை விட, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது. இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்பட்டு சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். நாட்டில் பரவலான அச்சம் உள்ளது. சமூகத்தின் அனைத்து தூண்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருப்பதால் எங்கும் அச்சம் நிலவுகிறது

இப்போது ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பலர் மாறுகிறார்கள். அவர்கள் மாறவில்லை என்றால், தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுவோம் என்ற பயத்தில் உள்ளனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைப் பற்றிப் பேசிய சிதம்பரம், “இந்தியாவை சேதப்படுத்தும் எதையும் நாங்கள் செய்யவில்லை. இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, விளையாட்டி தவறுகள் நடந்திருக்கலாம். அவை ஆட்சியின் தோல்விகள். ஆனால், இந்தியாவுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நாங்கள் எதையும் செய்யவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT