ஆம் ஆத்மி கட்சி வசீகரன்
ஆம் ஆத்மி கட்சி வசீகரன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைப்பயணத்தை தொடங்குகிறார் ஆம் ஆத்மி கட்சி வசீகரன்!
அரசியல்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைப்பயணத்தை தொடங்குகிறார் ஆம் ஆத்மி கட்சி வசீகரன்!

காமதேனு

மேக் இந்தியா நம்பர்1 என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலியுறுத்தி இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் திருச்சியிலிருந்து வரும் 5-ம் தேதி தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை செல்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2020-ல் முதல்கட்ட நடைப்பயணம் சென்னையில் தொடங்கி திருச்சியில் முடிவடைந்தது. இந்த நடைப்பயணம் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்ட பாதுகாப்பு வலியுறுத்தி என்னுடைய தலைமையில் நடைபெற்றது. 2022 நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக மீண்டும் வரும் 5-ம் தேதி மதியம் 2 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையின் அருகிலிருந்து (காந்தியடிகள் தண்டி யாத்திரை புறப்பட்ட இடம்) என்னுடைய தலைமையில் மீண்டும் நடைப்பயணம் தொடங்க உள்ளது.

இந்த நடைப்பயணம் கெஜ்ரிவாலின் திட்டமான "மேக் இந்தியா நம்பர் 1" (உலக அரங்கில் இந்தியாவை முதன்மையானதாக மாற்றுவோம்) என்பதை வலியுறுத்தியும் அதோடு தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்டத்தை பாதுகாத்தல் மற்றும் டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சி அரசின் சாதனைகளான கல்வி சுகாதாரம், வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை தேவைகளை வழங்கி வரும் வெற்றிகரமான கெஜ்ரிவால் ஆட்சியின் சாதனைகளை விளக்கவும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் விரோத பாஜக ஆட்சியை ஆகற்றி மக்களாட்சியை உண்மையான ஜனநாயக ஆட்சியை நேர்மையான ஆட்சியை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமைத்தது போல் இந்திய அளவில் 2024-ல் உருவாக்கிட வலியுறுத்தியும் மக்களை நோக்கி இந்த நடைப்பயணம் இந்த செல்கிறது.

இந்த நடைப்பயணத்திற்கு சாதி, மதம், இனம், அரசியல், மொழி பாகுபாட்டில்லாமல் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். "இந்திய தேசத்தை உலகில் முதன்மை நாடாக ஆக்குவோம்" என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலுப்படுத்திட இந்த "தேசம் காப்போம்" நடைப்பயணத்திற்கு அனைவரும் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஆதரவு தருவததோடு தயக்கமின்றி தேச வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தோழர்களையும் தமிழக மக்களையும் அன்புடன் அழைக்கிறேன். கிட்டத்திட்ட 500 கிமீ 15 நாட்கள் நடக்க உள்ளேன். ஆம் ஆத்மி தோழர்கள் மற்றும் இந்தியாவில் 2024-ல் நல்லாட்சி விரும்பும் அன்பர்கள் ஒரு நாளாவது என்னுடன் நடக்க வர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT