அரசியல்

லைகா தயாரிப்பு நிறுவன சிஇஓ-வுக்கு பாமகவில் முக்கிய பதவி!

காமதேனு

லைகா சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கத்தி', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'எமன்', 'இப்படை வெல்லும்','தியா','கோலா மாவு கோகிலா', 'செக்கச் சிவந்த வானம்','வடசென்னை',' 2.0','வந்தா ராஜாவா தான் வருவேன்','காப்பான்', 'தர்பார்','பன்னிக்குட்டி', 'இந்தியன் 2', 'பொன்னியின் செல்வன்','டான்' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் லைகா. இதன் சிஇஓவாக இருப்பவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்.

இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான நியமனக்கடிதத்தை பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ், தமிழ்க்குமரனிடம் வழங்கினார்.

பாமக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்க்குமரன், 2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பாமக மாநிலத் தலைவராக இருந்த ஜி.கே.மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கு எதிராக கருத்துப் போராட்டம் நடத்தி வரும் பாமக, அதே திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT