ரூ.2.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ரூ.2.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் 
அரசியல்

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

காமதேனு

விழுப்புரம் அருகே, வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணத்துடன் வந்த நபர்கள், பறக்கும் படையினர் வந்ததால் காருடன் 2.25 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் தரப்பில் முறைகேடுகளை தடுப்பதற்காக கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணத்துடன் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்

இறுதிக் கட்டத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு விழுப்புரம் அருகே உள்ள முகையூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

பணம் விநியோகம் செய்ய வந்தவர்கள் விட்டுச்சென்ற கார்

ஆனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதை கண்டு, காருடன் 2.25 லட்சம் ரூபாய் பணத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் 2.25 லட்சம் ரூபாய் பணம் திருக்கோவிலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

SCROLL FOR NEXT