போட்டோ கேலரி

முதல் எழுத்து கற்கும் மழலைகள் - விஜயதசமி நாளின் சிறப்பு ஆல்பம்!

ஜெ.மனோகரன், வி.எம்.மணிநாதன்

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்து, இசை, நடனம் மற்றும் கலைகளை கற்றுத்தருவது பாரம்பரிய வழக்கமாகும். வித்யாரம்பம் என அழைக்கப்படும் இந்த நாளில் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச்சென்று முதன்முதலாக அரிசியில் எழுத்துக்களை எழுத கற்றுத்தருவது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விஜயதசமியான இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்த நிகழ்வு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் குழந்தைகளின் கல்வி துவங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இதோ...

வேலூர் சலவன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நர்சரி, பிரைமரி பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து தங்க எழுதுகோல் மற்றும் விரல்களால் நெல் மணியில் தமிழ் முதல் எழுத்து ‘அ’ என்று எழுதி திருஏட்டை தொடங்கி வைத்தனர்.

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT