படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
போட்டோ கேலரி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... முரட்டுக்காளையுடன் மல்லுக்கட்டு!

காமதேனு

கரோனா இடர்பாடுகளைத் தகர்த்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வழக்கம்போல அரங்கேறியது. உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு குறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றாலும், இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக உலகம் முழுக்க பல கோடிக் கண்கள் ஜல்லிக்கட்டை கண்டு மகிழ்ந்தன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்து பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுத்தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றன. இந்த ஆண்டும் சில முன்னேற்றங்களைக் காணமுடிந்தது. ஆள் மாற்றட்டத்தை 99.9 சதவீதம் தடுத்த ஜல்லிக்கட்டு இது. காளைகள் துளியும் துன்புறுத்தப்படாமல் வாடிவாசல் வழியே பாய்ந்துவர, வீரர்களும் கொம்பும் திமிலுமே குறி என்று பாய்ந்து பிடித்தார்கள். சில காளைகள் வீரர்களைக் கடந்து ஓடிவிடாமல், திரும்பிவந்து பிடிக்கிறவன் பிடி பார்ப்போம் என்று மிரட்டலாக வந்து நின்றதும், சில மாடுகள் வீரர்களை விரட்டி விரட்டி முட்டியதுமாக களத்தில் அனலைக் கிளப்பின. அந்த விறுவிறு காட்சிகளில் சிலவற்றை, நமது புகைப்படக் கலைஞர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி காமிரா கண் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார். காமதேனு வாசகர்களுக்காக அவற்றை இங்கே தருகிறோம்.

SCROLL FOR NEXT