ஒளிர்

படிச்சது நாலாவது... படைச்சது நூலானது!- கள் இறக்கும் தொழிலாளியின் கனவுகள்

காமதேனு

கா.சு.வேலாயுதன்

‘இந்த உலகம் முழுவதும் அழிந்து நான் ஒற்றை மனிதன் உயிரோடு இருந்தாலும் உலகை மீண்டும் புதுப்பிப்பேன்’ தினம் தினம் கள் இறக்க தென்னை ஏறிக்கொண்டிருக்கும் கோவிந்தராஜின் கற்பனைக்குள் உதித்த அற்புதக் கவி இது!

கேரள - தமிழக எல்லையில் பொள்ளாச்சி கோபாலபுரம் அருகே இருக்கிறது நெடும்பாறை கிராமம். இதன் ஒதுக்குப்புறத்தில் முளைத்திருக்கும் எம்ஜிஆர் நகர் காலனிவாசிதான் கோவிந்தராஜ்.

படிப்பறிவு என்னவோ நான்காம் வகுப்புதான். ஆனால், பட்டறிவு பிஹெச்டி ரேஞ்சுக்கு இருக்கிறது. நான் தேடிப்போனபோது தனது குடிசைக்குள் கிடந்த இரும்புக் கட்டிலில் அமர்ந்து ‘புதிய விதி’ என்ற தனது நூலை மெல்ல புரட்டியபடி மலரும் நினைவுகளில் மூழ்கி இருந்தார் கோவிந்தராஜ்.

SCROLL FOR NEXT