செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

காமதேனு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகள பிரிவில் தொடர் ஓட்டத்தில், திருச்சியை சேர்ந்த டிக்கெட் கலெக்டர், இந்திய அணி சார்பில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்திய வீரர்கள் இந்த வருடம் அதிக அளவிலான பதக்கங்களை வென்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அனஸ், அமோஜ், அஜ்மல், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:01.58 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது. இதில் ராஜேஷ் ரமேஷ், திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதுவரை இந்திய அணி 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 174 தங்கம் உட்பட 321 பதக்கங்களுடன் சீனா உள்ளது. 37 தங்கத்துடன் ஜப்பான் 2வது இடத்திலும், தென்கொரியா 33 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்திய அணி இதற்கு முந்தைய காலங்களை காட்டிலும் இவ்வாண்டு அதிக அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT