மழை 
செய்திகள்

கேரளாவில் தொடங்கப் போகுது பருவமழை ... தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கே.காமராஜ்

கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜூன் மாதம் துவங்கும். ஒரு சில ஆண்டுகளில் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தென்மேற்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரபிக் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்வதற்காகன வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க உள்ளதையடுத்து இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கணிசமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் வெப்பமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் கணிசமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT