சொமாட்டோ 
செய்திகள்

காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம்... நஷ்டத்தில் இருந்து மீண்டது சொமாட்டோ!

காமதேனு

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உணவு விநியோக தொழிலில் ஈடுபட்டுள்ள சொமாட்டோ, 2023-ன் 4-வது காலாண்டில் ரூ.188 கோடி நஷ்டமடைந்திருந்த நிலையில் 2024 ம் ஆண்டின் முதல் காலாண்டில் லாபம் ஈட்டி உள்ளதால்  அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் பொதுமக்களின்  வரவேற்பு காரணமாக பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் ஆர்டர் செய்து உண்ண முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உண்பது வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த வரவேற்பால் ஆன்லைன் உணவு விநியோக தொழிலில் பல  நிறுவனங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இதனால் லாப நஷ்டத்தை அவ்வப்போது அந்நிறுவனங்கள் சந்திப்பதும் இயல்பாகி விட்டது.  இந்நிலையில், சொமோட்டோ நிறுவனம் 2023 – 2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.138 கோடி லாபம் ஈட்டியிருந்தது. கடந்த நிதியாண்டில் (2022 – 2023) இதே மூன்றாம் காலாண்டில் சொமோட்டோ நிறுவனம் ரூ. 347 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த நிலையில் 2024 ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக சொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.  நஷ்டத்தில் இருந்து வந்த சொமாட்டோ நிறுவனம் லாபம் ஈட்டி உள்ளதால் அதன்  முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT