பழநி முருகன் கோயில் 
செய்திகள்

பழநி முருகன் கோயிலுக்கு நாளை போறீங்களா? பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!

கவிதா குமார்

பழநி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை ( மே 30) ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

ரோப் கார் சேவை

அதனால் பழநி மலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் மலையில் உள்ள படிக்கட்டு வழியாக ஏறி செல்ல முடியாத வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சுலபமாக மலை மேல் சென்றடைய ரோப் கார் வசதி பெரிதும் உதவியாக உள்ளது.

இந்த நிலையில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

ரோப் கார் சேவை

இதன் காரணமாக பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படிப்பாதை அல்லது மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT