மதுபோதையில் போலீஸாரைத் தாக்கிய மூவர் கைது 
செய்திகள்

போதை ஏறி போச்சு... போலீஸாரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது!

கே.காமராஜ்

கோவை அருகே சாலையில் மது குடித்தவர்களைத் தட்டி கேட்ட காவல் துறையினரை தாக்கிய மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன். இவர்கள் அன்னூர்-சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில் நின்று மது குடித்து கொண்டு இருந்துள்ளனர். அதனை பார்த்த போலீஸார், அங்கு நின்று மது குடிக்கக் கூடாது எனவும் அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

அன்னூர் காவல் நிலையம்

இதனால் போலீஸாருக்கும் அந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவலர்கள் அது குறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து சென்ற சக போலீஸார் காவலர்களை தாக்கிய மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அன்னூர் காவல் நிலையம்

விசாரணையில் அவர்கள் கிருத்திக், ஈஸ்வரன்,பிரதீஷ் என்பதும், மூவரும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் மது போதையில் போலீஸாரிடமே தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT