நடிகர் விஜய் 
செய்திகள்

விஜய் ஆண்டனி மகள் மறைவு; லியோ படக்குழு எடுத்த முடிவு!

காமதேனு

விஜய் ஆண்டனியின் மகள் மறைவால் லியோ பட போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு படிக்கும் அவர் கடந்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சளால் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

விஜய் ஆண்டனி

இச்செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதலப்பக்கங்களிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லியோ படக்குழு டிவிட்டர் பதிவு

இந்நிலையில், 'லியோ' படக்குழுவினர் தங்களது சமூக வலைதளத்தில் மீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT