ஜி.வி.பிரகாஷ் 
செய்திகள்

தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஜிவி பிரகாஷ் கோபம்!

வீரமணி சுந்தரசோழன்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை’ என அவர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி ஏழை, எளிய மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராய உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ள நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

SCROLL FOR NEXT