ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் 
செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

கே.காமராஜ்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்ஜண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமத் சோரன் மீது நில மோசடி புகார்கள் சுமத்தப்பட்டது. குறிப்பாக போலி ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை குறைந்த விலைக்கு வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சட்டவிராத பணப்பரிமாற்ற புகாரில் கடந்த ஜனவரி மாதம் அவரை கைது செய்தது.

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்.

இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன், ஜாமீன் வழங்கக் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தார். குறிப்பாக மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் போல் தனக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT