நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடும் பணி 
செய்திகள்

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: இந்தியா உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளது - பிரதமர் மோடி ட்வீட்

வ.வைரப்பெருமாள்

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு பேரழிவால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அருகே ஓஷியானா மண்டலத்தில் அமைந்துள்ள நியூ கினியா தீவின் கிழக்குப் பகுதியையும், மெலனீசிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு பப்புவா நியூ கினியா.

தென் பசிபிக் தீவு நாடான இங்குள்ள எங்கா மாகாணத்தின் யம்பலி கிராமத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் புதையுண்டதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு

இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என பப்புவா நியூகினியா தேசிய பேரிடர் மைய இடைக்கால இயக்குநர் லுசேட்டா லாசோ மனா, ஐ.நா. ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பேரிடருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அந்நாட்டுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT