ஜெயிலர் 
செய்திகள்

Father's Day: ’ஜெயிலர்’ டூ ‘அசுரன்’... தந்தையை மையப்படுத்தி வந்த தமிழ்ப் படங்கள்!

ச.ஆனந்தப்பிரியா

நாளை தந்தையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ் சினிமாவில் தந்தை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி நிறைய கதைகள் வந்திருக்கிறது. இதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சில படங்கள் பற்றி இங்குப் பார்க்கலாம்.

’ஜெயிலர்’:

'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘நெல்சன்’. பொறுப்பான தந்தையாக, தப்பு செய்தால் மகன் என்றும் பாராமல் கண்டிப்புடன் இருப்பவராக நடித்திருப்பார் ரஜினிகாந்த். அதே சமயத்தில் அவருக்கான மாஸ், ஆக்‌ஷன் காட்சிகளும் இந்தப் படத்தில் அமைந்திருந்தது.

’அசுரன்’:

‘அசுரன்’ தனுஷ்

கதைதான் ஹீரோ என்பதைப் புரிந்து கொண்டு இரண்டு மகன்களுக்கு தந்தை கதாபாத்திரத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்திருப்பார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றிப் பெற்றது.

’அபியும் நானும்’:

மகள் வளர வளர அப்பாவும் கூடவே வளர்கிறான் என மகளின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்பாவின் பாசத்தைப் பேசியிருந்த படம் ‘அபியும் நானும்’. ராதாமோகன் இயக்கத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர்.

’தெய்வத்திருமகள்’:

விஜய் இயக்கத்தில் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் ‘தெய்வத்திருமகள்’. விக்ரம்- பேபி சாரா இருவரும் எமோஷனலான நடிப்பைக் கொடுத்திருந்தார்கள்.

’தங்கமீன்கள்’:

ராம் இயக்கத்தில் வெளியான ’தங்கமீன்கள்’ மகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றும் தந்தையின் செயல்தான் கதை.

இந்தப் படங்கள் தவிர ’சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்டப் பல படங்கள் தந்தையை மையப்படுத்தி வந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

மோடியின் கால்களில் விழுந்து பீகார் மக்களை நிதிஷ்குமார் அவமானப்படுத்தியுள்ளார்: பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது சிறுமி சடலமாக மீட்பு... 15 மணி நேர போராட்டம் வீணான சோகம்!

மகள் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு எடுத்த தாய்... கதறும் கணவன்

விழுப்புரத்தில் பரபரப்பு... தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை!

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம்: 5 பெண்கள் உள்பட 13 பேர் கைது!

SCROLL FOR NEXT