சென்னை விமான நிலையம் (கோப்பு படம்) 
செய்திகள்

கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்... சென்னையில் பயணிகள் பாதிப்பு!

கவிதா குமார்

சென்னையில் நேற்று விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அந்தவகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மூன்றுமணி நேரமாக கொட்டித் தீர்த்தது.

கனமழை

மேலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்தன.

சென்னை விமான நிலையம்

குறிப்பாக ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT