நிலநடுக்கம் 
செய்திகள்

திடீர் நிலநடுக்கத்தால் குலுங்கியது மணிப்பூர்... 4.5 ரிக்டர் ஸ்கேல் பதிவால் அதிர்ச்சி

எஸ்.எஸ்.லெனின்

இன்று மாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மணிப்பூர் மாநில மக்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

மணிப்பூரில் புதன் மாலை ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. எனினும், சேதம் குறித்தான உடனடி தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

என்சிஎஸ் அளித்த தகவலின்படி மாலை 7.09 மணியளவில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக அளவிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பிஷ்ணுபூர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. “ஜூன் 26 அன்று 19.09 மணிக்கு மணிப்பூரின் பிஷ்ணுபுரியில் நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டது. இது தரையிலிருந்து 25 கிமீ ஆழத்தில் அடையாளம் காணப்பட்டது” என என்சிஎஸ்-ன் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

முன்னதாக மணிப்பூரின் காங்போக்பியில் ஜூன் 16 காலைநிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.21 மணியளவில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. அதற்கும் முன்னதாக வலுவான நிலநடுக்கம் ஒன்று 8 ஆண்டுகள் முன்னதாக மணிப்பூரில் நிகழ்ந்தது.

நிலநடுக்கம்.

ஜனவரி 4, 2016 அன்று, 6.7 ரிக்டர் அளவுள்ள வலுவான நிலநடுக்கத்தை மணிப்பூர் எதிர்கொண்டது. இது எட்டு நபர்களைக் கொன்றதோடு, இம்பாலின் தனி அடையாள சின்னமான 'நுபி கீதெல்' உட்பட ஏராளமான வீடுகள் மற்றும் கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.

SCROLL FOR NEXT