பிரதமர் நரேந்திர மோடி 
செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

கே.காமராஜ்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு, தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருகை தர உள்ளார். அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, கன்னியாகுமரி மட்டுமின்றி, கடலோர மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு

மேலும் ஆழ்கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் தென்பட்டால், மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. 24 மணி நேரமும் இந்த கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு

இதேபோன்று கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் சிறிய படகுகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையிலும் இந்த ரோந்துப் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT