மழை 
செய்திகள்

கனமழை... 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... பாதுகாப்பா இருங்க மக்களே!

காமதேனு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். மேலும் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். இதனால் நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளனர்.

மழை

இந்நிலையில், சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT