இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
செய்திகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி 2வது தோல்வி; வங்கதேசம் த்ரில் வெற்றி!

கே.காமராஜ்

டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் ’டி’ பிரிவு லீக் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பத்தும் நிசங்க 47 ரன்களும், தனஞ்செய 21 ரன்களும் அசலங்க 19 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 20 அவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை அணி வீரர்கள்

வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான், ரிசாத் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஹசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் லிட்டன் தாஸ் 36 ரங்களும், தவ்ஹித் ஹிரிட்டோய் 40 ரன்களும் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எட்டி அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம் அணி - இலங்கை அணி

இதன் மூலம் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய துஷார 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT