‘GOAT' 
செய்திகள்

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ச.ஆனந்தப்பிரியா

நடிகர் விஜயின் ‘GOAT' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்தானத் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து நடிகர் விஜய் ‘GOAT' படத்தில் அப்பா- மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு, அட்லி இயக்கத்தில் அவர் ‘பிகில்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மகன் விஜயை இன்னும் இளமையாகக் காட்ட அமெரிக்காவில் சிறப்பு விஎஃப்எக்ஸ் காட்சிகளை படக்குழு உருவாக்கி இருக்கிறது.

GOAT

சமீபத்தில் இந்தப் பணிகளை முடித்துவிட்டு நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பியிருந்தனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அப்பா- மகன் மோதிக்கொள்ளும்படியான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்கி இருக்கிறாராம் வெங்கட்பிரபு. விஜய் VS விஜய் என்ற விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

படத்தில் விஜய்க்கு வில்லன் மோகன்தான். விஜய்க்கும் மோகனுக்கும் இடையிலும் தரமான சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். இதையும் மிஞ்சும்படி கிளைமாக்ஸில் விஜய் VS விஜய் மோதல் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'GOAT'

இந்தப் படத்தில் நடிகர்கள் லைலா, பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு முதல் பாடல் வெளியான நிலையில் இந்த மாதம் 22ம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT