சிம்பு, கமல்ஹாசன் 
செய்திகள்

வெளிநாடு பறக்கும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர்!

ச.ஆனந்தப்பிரியா

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அடுத்து வெளிநாடு பறக்க இருக்கின்றனர்.

இயக்குநர் மணி ரத்னம்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘தக் லைஃப்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டப் பலரும் நடித்து வருகின்றனர். இதில் கமல், சிலம்பரசன், அசோக்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்ற மூன்றாவது பாண்டிச்சேரி ஷெட்யூல் தற்போது முடிந்திருக்கிறது.

'தக் லைஃப்’ படத்தில் சிம்பு...

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு ப்ரீ கிளைமாக்ஸை பாண்டிச்சேரியில் ஷூட் செய்திருக்கிறார்கள். இதுவரை 60% படப்பிடிப்பை 40 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் மணி ரத்னம். அடுத்த ஷெட்யூல் வெளிநாடுகளிலும் கேரளாவிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தில் கமல்

இதற்காக விரைவில் அவர்கள் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் த்ரிஷாவும் பங்கேற்கிறார். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டப்பிங்கும் முடித்திருக்கிறார். இந்த மாத இறுதியில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT