அஜித் 
செய்திகள்

ரேஸ் காரில் மாஸ் காட்டிய அஜித்... தீயாய் பரவும் வீடியோ!

ச.ஆனந்தப்பிரியா

நடிகர் அஜித் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரேஸ் பைக், கார் ஓட்டுவதில் அதிக பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். சொந்தமாக ‘ஏகே மோட்டோ ரைட்’ கம்பெனியும் நடத்தி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் சின்ன பிரேக் கிடைத்தாலும் பைக், கார் எடுத்துக் கொண்டு செம கூலாக அவர் ரைட் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

அப்படியான சமீபத்திய வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. ரேஸ் காரில் செம ஸ்பீடாக பறந்து சென்றிருக்கிறார் அஜித். வீடியோவைப் பார்க்கும் போது பலரும் பதட்டமாக இருப்பதாக சொன்னாலும், ரசிகர்கள் நிறைய பேர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு, ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றிருக்கிறார்.

நடிகர் அஜித்

’விடாமுயற்சி’ திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ‘குட் பேட் அக்லி’ அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT