செய்திகள்

துரத்திய யானையை செல்போனில் வீடியோ எடுத்த வனத்துறை ஊழியர்! மிதித்து கொன்ற யானை!

காமதேனு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடி வந்த யானையை வனத்துறை ஊழியர் ஒருவர், தப்பியோடாமல் நின்றபடியே செல்போனில் யானையை வீடியோ எடுக்கும் போது, தவறி விழுந்ததை அடுத்து, அவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிரோலி அருகே பலஸ்கான் என்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, தங்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு வனத்துறையினர் சென்ற போது, அவர்களை யானை துரத்தத் தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த வனத்துறையினர் காட்டுக்குள் ஓடினர்.

வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்த ஓட்டுநர் சுதாகர் பி அத்ரம் என்பவர், விரட்டி வந்த யானையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த யானை ஓட்டுநரை துரத்த தொடங்கியது. அவர் பயத்தில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது யானை அவரை மிதித்துக் கொன்றது.

யானை சென்ற பிறகு அதிகாரிகள் வந்து ஓட்டுநர் சுதாகரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT