செய்திகள்

வார இறுதி நாட்கள், கிரிவலம்… இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

காமதேனு

வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (28.10.2023) மற்றும் நாளை மறுநாள் (29.10.2023)  விடுமுறை தினங்கள் என்பதால் இன்று (27.10.2023) சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நாளை திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT