பாஜக எம்.பி பிரிஜ் பூஷன்
பாஜக எம்.பி பிரிஜ் பூஷன்  மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்: பாஜக எம்.பி வீட்டில் போலீஸார் விசாரணை
தேசம்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்: பாஜக எம்.பி வீட்டில் போலீஸார் விசாரணை

காமதேனு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் ஏப். 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது டெல்லி போலீஸாரால் வலுக்கட்டாயமாக அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள பிரிஜ்பூஷன் வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT