சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிபிஐ அதிகாரிகள் விசாரணை சிபிஐயிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த தொழிலாளி: நடந்தது என்ன?
தேசம்

சிபிஐயிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த தொழிலாளி: நடந்தது என்ன?

காமதேனு

டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயற்சித்த கட்டிட தொழிலாளியின் கால் எலும்பு முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் டெல்லியில் உள்ள டாடா ப்ரிமாண்டி சொசைட்டியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கட்டுமான நிறுவன மோசடி மற்றும் ஊழல் வழக்கில் இவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரை கைது செய்ய சிபிஐ இன்ஸ்பெக்டர் ரன்பீர் சிங் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அவரது வீட்டிற்குச் சென்றனர்.

அவர்கள் வருவதைப் பார்த்து விட்ட சஞ்சீவ் குமார், அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக முதல் மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவரை கைது செய்யச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாடியில் இருந்து கீழே குதித்ததால் சஞ்சீவ் குமார் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து பாட்ஷாபூர் காவல் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT